இதுவரை நீங்க பார்க்காத மொறுமொறுப்பான சுரைக்காய் பஜ்ஜி | Bottle Gourd Bajji Recipe In tamil | Bajji recipe

Bottle Gourd Bajji Recipe In tamil | Bajji recipe

இதுவரை நீங்க பார்க்காத மொறுமொறுப்பான சுரைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது?
நாம் எல்லோரும் இது வரைக்கும் டீக்கடை நாயர் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, குடைமிளகாய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளை கிழங்கு பஜ்ஜி, நேந்திரம் பழ பஜ்ஜி ஏன் வெங்காய பஜ்ஜி கூட கேள்வி பட்டிருப்பிங்க?

ஆனால் சுரைக்காய் பஜ்ஜி பார்த்து இருக்க மாட்டிங்க, சாப்பிட்டும் இருக்க மாட்டிங்க அது எப்படி செய்வது?

நாம் சமையல் பன்னுவது வீட்டில் உள்ள அனைவரும் நம்மை பாராட்டா விட்டாலும் அடுத்த முறை திரும்ப கேட்கும் உணவாக இருந்தால் அதுவே மிகபெரிய சந்தோசம்.

அப்படி மீண்டும் மீண்டும் செஞ்சு குடுங்கனு சொல்லுகின்ற சுரைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம்

செய்முறை:
முதலில் ஒரு கப் அளவு கடலை மாவு, அரிசி மாவு 1டீஸ்பூன், இட்லி சோடா 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் 1/2 டிஸ்பூன், மிளகாய் தூள் தேவையான அளவு, தண்ணீர் பஜ்ஜி பதம் அளவுக்கு.

இப்போது நன்றாக கலந்து கொள்ளவேண்டும் கட்டி இல்லாத வாரு கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் நன்றாக் காய விடவும் சுரைக்காய் வட்ட வடிவில் வெட்டி விடவும். பஜ்ஜி போட எப்பொழுதும் இளம் காய் தான் விதை கம்மியாக இருக்கும்.

இப்பொழுது கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் வெட்டி வைத்த சுரைக்காய முழுக்கி எடுத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடான மொறு மொறு சுரைக்காய் பஜ்ஜி ரெடி!!
சரி வாங்க சூட சாப்பிட்டு பார்க்கலாம்.
உங்க விட்டுல இந்த பஜ்ஜி மட்டும் செஞ்சு பாருங்க இதுலயா பஜ்ஜி செஞ்சன்னு அசந்து போயிடுவாங்க.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
இட்லி சோடா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
இளம் சுரைக்காய் – அரைப்பகுதி.
பெருங்காயம் தூள்

இனி உங்க வீட்டில் சுரைக்காய் மீதி ஆனால் கவலை வேண்டாம். மொறு மொறுப்பான சுரைக்காய் பஜ்ஜி சுட்டு குடுத்தால் தட்டு காலி அகிவிடும்.

உங்க வீட்டிலையும் செய்து பார்த்து செல்வி அம்மா சமையல் எப்படி இருந்தது என்று கமெண்ட் பன்னுங்க!!

Exit mobile version