மதியம் சாப்பாட்டிற்கு நெய் பீன்ஸ் சாதம்
இனி யாரும் பீன்ஸ் வேணாம்னு சொல்ல மாட்டாங்க. பெரும்பாலும் பீன்ஸ்னா யாருக்கும் புடிக்காது. ஆனால் இப்படி நெய் கலந்த பீன்ஸ் கலவை சாப்பாடுனா ருசியில் அசந்து போவாங்க அந்த அளவுக்கு அமுர்தமாக இருக்கு.
மதிய சாப்பாடு லன்ச் பாக்ஸ்க்கு எனக்கு பீன்ஸ் சாப்பாடு வேணும் என்று கேட்டாலும் அச்சர்ய பட போரிங்க!!!
எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பிஞ்சான பீன்ஸ் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்),
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்,
சோம்பு கசகச – ½ டீஸ்பூன்
பட்டை ரவங்கம் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பில்லை – தேவையான அளவு
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு,
நெய் – ½ டீஸ்பூன்,
மிளகாய்தூள் – ⅓ டீஸ்பூன்,
தண்ணீர் – 1 டம்பளர்.
செய்முறை
கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்தெடுத்து. நறுக்கிய பீன்ஸை போட்டு சிறிது நெய் விட்டு தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும், பின்பு இரண்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும், பின்பு சிறிது மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஒரு டம்பளர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும். சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். பீன்ஸ் சாதம் ரெடி.
குறிப்பு: மொறுமொறுப்பு தேவைப்படுகிறவர்கள் சிப்ஸை ஒரு கவரில் போட்டு வைத்துக்கொண்டு பீன்ஸ் சாதம் சாப்பிடும்போது மேலேத் தூவி சாப்பிடவும்.
உப்பு வெங்காயம் போடும் போதே சிறிதலவு போட்டால் காய் கறி வேகமாக வேகும்.
நெய் வேண்டாம் என்பர்கள் சேர்க்க வேண்டாம்.
உங்க வீட்டிலையும் செய்து பார்த்து செல்வி அம்மா சமையல் எப்படி இருந்தது என்று கமெண்ட் பன்னுங்க!!