ஆற்று ஓரத்தில் 10 ரூபாய்க்கு ராகி களியும் 30 ரூபாய் சுட சுட மீன் குழம்பு !” சேலம் மேட்டூர் பண்ணவாடி சிறப்பு தொகுப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் அருகில் பண்ணவாடி பரிசல் துறை சிறப்பு தொகுப்பு
சேலத்தில் இருந்து மேட்டூர்க்கு 53 கிலோ மீட்டர் தொலைவு, மேட்டூரில் இருந்து கொளத்தூர் பண்ணவாடி 13 கிலோ மீட்டர் தொலைவு. இங்கு மீன் அப்போதே பிடித்து உங்கள் கண் முன்னாடியே சுத்தம் செய்து சமைத்தும் தருகிறார்கள், நீங்கள் வெளியே எங்க மீன் வாங்கினாலும் 50 ரூபாய்க்கும் கம்மி இல்லை ஆனால் பண்ணவாடியில் பொரித்த மீன் 10, 15 ரூபாக்கும் கொழம்பும் களியும் 40 ரூபாய்க்கும் விற்கிறார்கள், ஒரு 100 ரூபாய் இருந்தால் போதும் வயிரு நிறைய சாப்பிடலாம் 2 நபர்கள். நமக்கு வேண்டும் என்றால் நாமே சமையல் செய்தும் சாப்பிடலாம்.
மேட்டூரில் இருந்து பண்ணவாடிக்கு பஸ் போக்குவரத்தும் உள்ளது. பண்ணவாடி உங்களை அன்புடன் வரவேற்க்கும் பொரிச்ச மீன் வாசனையுடன், மீன் குழம்பு களி, வறுவல் வகை அட அட என்ன ஒரு ருசி. சேலத்தில் இப்படி ஒரு இடம் இருப்பது பல பேருக்கு தெரியாது, இங்கு வருபவர்கள் களியுடன் மீன் சாப்பிடாமல் போக மாட்டார்கள். சாப்பிட்டவுடன் நீங்கள் பரிசலில் சென்று சுற்றி பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். பரிசலில் செல்ல ஒரு நபருக்கு கட்டணம் 50 ரூபாய் வசுல் செய்யப்படுகிறது.
