சுவையான கொத்தமல்லி பிரியாணி செய்வது எப்படி ?
கொத்தமல்லி பிரியாணி
தேவையான பொருட்கள் :
கடுகு – 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
நிலக்கடலை 2 டீஸ்பூன்
முந்திரி 10
வரைமிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 1
எண்ணெய் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் 1/2 பழம்
சாதம் – 1 கப்
அரைக்கத் தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை – 1 கட்டு
இஞ்சி – தேவையான அளவு
உப்பு – ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் – 4
செய்முறை :
கொத்தமல்லி தழை, இஞ்சி, பச்சை மிளகாய் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, முந்திரி, வரைமிளகாய் போட்டு தாளித்து பின் பெரிய வெங்காயம் போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
வெங்காயம் வதங்கியம் அரைத்த கொத்தமல்லி மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன் சாதத்தை போட்டு கிளறி அதன் பின் அரை எலுமிச்சை பழம் கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான சூடான மனமனக்கும் கொத்தமல்லி பிரியாணி சாதம் ரெடி.
செல்வி அம்மா சமையல் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, உங்களோட கமெண்ட் கண்டிப்பாக பண்ணுங்க