சத்தான, சுவையான கறிவேப்பிலை சாதம்
அரைக்கத் தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை தழை – 1 கப் அளவு
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
மிளகு – 8
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – தேவைக்கேற்ப்ப
வரைமிளகாய் – 4
செய்முறை :
கறிவேப்பிலை தழை, , சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, பெருங்காயத் தூள், புளி தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தாளித்தல்:
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
முந்திரி – 5
நிலக்கடலை 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
வரைமிளகாய் – 4
சாதம் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப்ப.
அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, முந்திரி, வரைமிளகாய் போட்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
வதங்கிய பின் வடித்த சாதத்தை போட்டு நன்றாக கிளறிவிடவும். சாதம், அரைத்த கறிவேப்பிலை மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்க்கவும், இப்பொழுது சூடான், சுவையான், சத்தான மனமனக்கும் கறிவேப்பிலை சாதம் ரெடி.
செல்வி அம்மா சமையல் பிடித்திருந்தால் லைக்பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, உங்களோட கமெண்ட் கண்டிப்பாக பண்ணுங்க