ஈரோடு மாஞ்சோலை மண்பானை தண்ணீ குழம்பு முளகு பொடி
ஈரோடு மாஞ்சோலை மண்பானை தண்ணீ குழம்பு முளகு பொடி
இந்த முளகு பொடி ஈரோடு சோலார் அருகிலுள்ள மாஞ்சோலை மண்பானை விருந்தின் இரகசிய கோப்பாகும்.
அவர்கள் பாரம்பரிய சுவையின் இரகசியத்தில் ஒரு துளியே இது.
இதில் அவர்கள் அனைத்து நாட்டு பொருட்கள் பெரும்பாலும் அவர்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களையே பயன்படுத்திகிறார்கள்.
தரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியதுவம் அளிக்கபடுகிறது. சுவை என்பது அவர்கள் கைகளுக்கே உள்ள தனி பக்குவமாகும் .
உங்கள் குழந்தைகளை பீட்ஸா , பர்கர் போன்ற உணவகங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்த்து இது போல ஆரோக்கிய உணவகங்களுக்கு அழைத்து சென்று பாரம்பரிய உணவு வகைகளை கற்று கொடுங்கள் அவர்கள் ஆரோகியத்தை பேணி பாதுகாக்க உதவுங்கள் !!!!
நாளை இந்த உணவின் முழு உருவம் பிரசூரம் செய்கிறேன்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை 1 கப்
குரு மிளகு 2 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் 2 மேஜைக்கரண்டி
பட்டை 4 இன்ச்
கிராம்பு 10
அண்ணாச்சி மொக்கு 2
சோம்பு 2 மேஜைக்கரண்டி
பச்சரிசி 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 13
செய்முறை
1. வடச்சட்டியை அடுப்புல வைத்து எண்ணெய் விடாமல் கொத்தமல்லி விதைகளை மணம் வீசும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
2. இப்பொழுது சீரகம் மற்றும் சோம்பை சேர்த்துகோங்க சிறிது நேரம் மட்டும் வறுத்து அதை எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும். கருகி விடாமல் பார்த்து கொள்ளவது அவசியம்.
3. இப்பொழுது அதில் குருமிளகை நன்றாக மணம் வீசும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
4. அதற்கு அடுத்தபடியாக பட்டை , கிராம்பு , அண்ணாச்சி மொக்கு இவைகளை நன்றாக மணம் வீசும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
5. இப்பொழுது வடச்சட்டியில் வரமிளகாயை சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வறுத்து தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். கவனம் தேவை கருகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
6. அரிசியை வடச்சட்டியில் சேர்த்துகோங்க நன்றாக பொரியும் வரை வதக்க வேண்டும். தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
7. இப்பொழுது நன்றாக ஆறவைத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக பொடித்து கொள்ள வேண்டும்.