மைசூர் பாக் 😋 தென் இந்திய உணவக ஸ்பெஷல் ( Mysore Pak Recipe)
மைசூர் பாக் 😋 தென் இந்திய உணவக ஸ்பெஷல் ( Mysore Pak Recipe)
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1/2 கிலோ
சர்க்கரை – 1. 1/2 கிலோ
எண்ணெய் – 1 லிட்டர்
நெய் – தேவையான அளவு
கேசரி பவுடர் மஞ்சல் நிறம் – தேவைப்பட்டால்
தண்ணீர் – 1/2 லிட்டர்
பேக்கிங் சோடா – 1 பின்ச்
செய்முறை:
ஒரு வாணலியில் 1. 1/2 சர்க்கரை சேர்த்து அந்த சர்க்கரை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். கலக்கும் போது கசடு நுறைப்போல் வரும் அதை எடுத்து விடவும், பின்பு சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
ஒரு கம்பி பதம் வந்தவுடன் கடலை மாவு, ஒரு பின்ச் பேக்கிங் சோடா அதில் சேர்த்து கைவிடாமல் மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். மைசூர் பாக்கு எண்ணெயை நன்றாக உறிஞ்சி கொள்ளும் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் விட்டு கிளறவும் அடிப்பிடிக்காமல்.
மைசூர்பாகு கலர் தேவைப்பட்டால் சேர்க்கவும், இறுதியாக மைசூர் பாகு வாணலியில் இருந்து பிரிந்து வரும். அப்பொழுது நெய் அல்லது எண்ணை தடவிய தட்டு அல்லது ட்ரே வில் சேர்க்கவும்.
30 நிமிடம் கழித்து மைசூர்பாகு தேவையான வடிவில் துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான மைசூர்பாகு தயார்.
மீண்டும் அடுத்த ஒரு பதிவில் பார்க்கலாம்..