
அய்யன் பாரம்பரிய மண்சட்டி சமையல் உணவகம்.
கொங்கு நாட்டு சமையல் என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு சமையல் மரபு.
கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. கொங்கு நாட்டு சமையல் எளிமையும், சுவையும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை.
கொங்கு நாட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவது கம்பு, திணை, சாமை, அரிசி, வீட்டில் இடித்து அரைத்த புத்தம் புது மசாலாக்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தோட்டத்தில் அவ்வப்போது பறித்த காய்கறிகள், உருக்கிய நெய், கட்டித்தயிர் என்பனவாகும். கொங்கு நாட்டு அசைவ உணவில் பங்கு வகிப்பது நாட்டுக்கோழி, வெடக்கோழி, கட்டு சேவல், வெள்ளாட்டு இறைச்சி, மீன், இறால் போன்றவைகளாகும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிக்னேச்சர் டிஸ் இருக்கும், அய்யன் பாரம்பரிய மண்சட்டி சமையல் உணவகத்திற்க்கும் ஒரு தனித்துவம் இருக்குங்க சைவம், அசைவம் இரண்டிலும் அருமையான உணவை ஓட்டல் உரிமையாளர் மேற்பார்வையில் தரமான, சுவையான கிராமத்து சமையல் முறையில் நமக்கு பரிமாறுகின்றனர்.
சிக்னேச்சர் டிஸ்
அரிசியும் பருப்பு சாதம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க உணவுவகை, அய்யன் உணவகத்தில் செய்யக்கூடிய நெய்யின் வாசனையுடன் பருப்பு சாதமும் நன்றாக குழைந்து கலந்து வரும் வாசம் இருக்கே வாயில் போட்டால் கரைந்து விடும்..
அட அட சொல்ல வார்த்தை இல்லை போங்க. அரிசியும் பருப்பு சாதம் அய்யன் உணவகம் போனால் கேட்டு வாங்கி சாப்பிடுவிங்க அந்த அளவுக்கு அருமை.
சரி நம்ம அடுத்து அசைவ உணவுக்கு வருவோம். சைவத்திலே நம்ம கொங்கு நாட்டு சமையல் கலக்குகின்றார்கள் என்றால் அசைவத்தில் சொல்லவா வேண்டும். கட்டு சேவல் நாட்டுக்கோழி தண்ணி குழம்பு, நாட்டுக்கோழி குழப்பு நம் பாரம்பரியத்தை கண் முன்னே நிறுத்தும். இவர்கள் செய்யும் கொங்கு சமையலில் கரம் மசாலா பொருட்கள் இருக்காது. மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய், நாட்டு சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், மற்றும் மிளகாய்த்தூள் மட்டும் சேர்த்து மண் சட்டியில் விறகு அடுப்பில் கொதிக்க விடும் போது அந்த இடமே நாட்டுக்கோழி குழம்பின் மணம் வரும் பாருங்க சொல்லும் போதே வாயில் எச்சில் ஊருது. இது மட்டும் இல்லிங்க நாட்டுக்கோழி வறுவல், வெள்ளாட்டு கறி வருவல், மட்டன் கொத்துக்கறி, குடல் கறி, வாழை இழை மீன் ஃப்ரை, அரிசியும் பருப்பு சாதம், பச்சை புளி ரசம், கரண்டி அம்லெட் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் மெனு லிஸ்ட்.
கோயம்புத்தூரில் இருந்து சேலம் வரும் வழியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வந்தால் ஒரு முறை சுவைத்தால் மறு முறை தானாகவே உங்கள் வண்டி யு-ட்டேன் அடிக்கும்..
அந்த அளவுக்கு இவர்களின் உபசரிப்பு, உணவு இருக்கும், அது மட்டும் இல்லிங்க நீங்கள் ஓட்டலில் நுழையும் போதே இவர்களின் சமையல் அறை அமைப்பு (கிட்சன் செட் அப்) இருக்கும் அதை பார்த்தாலே உங்களுக்கு சாப்பிடும் ஆசை வந்து விடும்.
நாங்கள் பெற்ற அனுபவம் உங்களுக்கும் கிடைக்கனும்.
Hotel Ayyan Village style Traditional Food 😋
அய்யன் பாரம்பரிய மண்சட்டி சமையல் உணவகம் & சைனீஸ் உணவகம்.
கிராமத்து முறையில் ஒரு குடும்ப உணவகம்
Location:
குமாரபாளையம்
Location: https://goo.gl/maps/JCKw6QEZifu2SbRC6
Contact: 9865231331, 9976531331