400 sq.ft வீட்டில் கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் சேலத்து இளைஞர் கடக்நாத் பண்ணை | Kadaknath farm
Kadaknath farm
கடக்நாத் கருங்கோழிமத்தியப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்கிறார்கள். முற்காலத்தில் ஆண்களுக்கு இனப்பெருக்க வீரியத்தை அதிகரிக்க உதவுவதாகக் கூறி, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ‘கறுத்தக்கோழி மிளகுப் போட்டு வறுத்து வச்சிருக்கேன்’ என்று நடிகை மீனா சொல்வதும் கடக்நாத்தை தான்.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு. அதனால் அதிக நோய் எதிர்ப்புச்சக்தி உள்ள சத்தான உணவுகளைத் தேடித்தேடி உட்கொண்டு வருகிறோம்.நல்லா கரு, கருவெனயிருக்கும் கடக்நாத் கோழியின் இறக்கைகள் மட்டுமின்றி, அதன் இறைச்சி, எலும்பு, இரத்தம், என சகலமும் கறுப்பு தான்.
இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம்.சங்ககால இலக்கிய பாடல்களிலும் கருங்கோழிகளின் மருத்துவ குணங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கருங்கோழிக்கறி மிகவும் நல்லது. இதன் இறைச்சியில் உள்ள மெலனின் என்ற நிறமியின் காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன.இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது.ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களும் தங்கள் உணவில் கருங்கோழி இறைச்சியைச் சேர்த்துக்கொள்வது நல்லது.* நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம்.
பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பும் உண்டு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடிய சக்தியும் கருங்கோழிகறிக்கு உண்டு.