இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு வெச்சா வச்ச குழம்பும் காலி வடிச்ச சாதமும் காலி
கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு – katharikai Murungakkai Kulambu
இந்த குழம்பு வெச்சா வச்ச குழம்பும் காலி வடிச்ச சாதமும் காலி. ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி குழ்ம்பு இது இரண்டுக்கும் நடுவில் வைத்தால் இந்த சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு வெச்சா கறி குழம்பு விட இதை தான் விரும்பி சாப்பிடுவாங்க உங்க வீட்டு குட்டிஸ்ல இருந்து பெரியவிங்க வரைக்கும்.
ஒரு வாழை இலையில் வடித்த சாப்பாடு அதன் மேல் ஆவி பரக்க சுட சுட கத்திரிக்காயும், முருங்கைகாயும் கலந்து குழம்பை ஊற்றினால் அதில் இருந்து ஒரு மனம் வரும் பாருங்க அட அட!!!
நாக்கில் தானாக எச்சில் ஊறி சுடு சாப்பாடாக இருந்தாலும் பரவால சுட்டாலும் நான் சாப்பிடுவேன் என்று ருசிப் பார்க்க தோன்றும், நம்ம கிராமத்து பாக்கம் வாரத்துல ஒரு நாளைக்காவது இந்த குழம்பு எல்லோருடை வீட்டிலும் பார்க்க முடியும். வாசனை பக்கத்து வீட்டுக்கு போய் எனுக்கும் ஒரு குண்டா குழம்பு குடுங்க என்று கேட்பார்கள் அது சொல்ல வார்த்தையே இல்லை..
சரி வாங்க கத்திரிக்காய் முருங்கைகாய் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 50கிராம் (நறுக்கியது)
தக்காளி – 4 (நறுக்கியது)
தேங்காய் – 1/2 கப் அளவு
முருங்கைக்காய் – 3 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
கத்திரிக்காய் – 8 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சல் தூள் – 1/2 டீஸ்பூன்
கறி மசாலா – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி அளவு.
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் போட்டு பளுப்பு நிறம் வரும் வரை வதக்கிய பின் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிமசால் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, அறைத்த தக்காளி, தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் பிரட்டி விட வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 ஒரு 15 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடுங்க. சுவையான கத்திரிக்காய் முருங்கய்காய் குழம்பு கொதிக்கிர சப்தம், வாசனையுடன் ரெடி.
சமையல் டிப்ஸ் (கத்திரிக்காய் அரியும் போது அரிந்த கத்திரிக்காய் தண்ணிரீல் போடவும் இல்லை என்றால் கருத்து விடும்.)
உங்க வீட்டிலையும் செய்து பார்த்து செல்வி அம்மா சமையல் எப்படி இருந்தது என்று கமெண்ட் பன்னுங்க!!