ஒபோஸ் OPOS என்றால் என்ன?
ஒரு 2 லிட்டர் குக்கர் எனும் மேஜிக்பாட். (Magic Pot)
அதென்ன ஒன் ஷாட்?
ஒரே நேரத்தில் ஒன்றோ, பலவோ உணவுகளை குறுகிய நேரத்தில், குறைவான அல்லது தண்ணீரே இல்லாமல் அதிகவெப்பத்தில் தயார் செய்வது.
குக்கரில்தானே சற்றொப்ப 5000 வருடங்களாக நாங்கள் சமைக்கிறோம். இதில் ஒபோஸ் என்ன ஒசத்தி?
குக்கர் சமையல் புதிதல்ல. ஒபோஸ் என்பது அதிக வெப்பத்தில், குறுகிய நேரத்தில், குறைவான தண்ணீர் பயன்படுத்தி சரியான அளவுகளில் பொருட்களை வரிசையாக அடுக்கிச் சமைக்கும் முறை. வழக்கமான குக்கர் சமையலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
எங்கள் பாட்டியும் இப்படித்தான் சமைப்பார். எல்லாவற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு, 16 விசில் வைத்து 1 மணி நேரம் வெந்து, நொந்து சமைப்பது. அதுதானே ஒபோஸ்?
இல்லை. தண்ணீர் கூட இல்லாமல், அதிக வெப்பத்தில் சமைப்பது. ஒரே ஒரு 2லிட்டர் குக்கரில் ஒரே நேரத்தில், 10 நிமிடங்களுக்குள்ளாக கூட்டு, பொரியல், அவியல், ரசம், சாம்பார் போன்றவற்றைச் சமைப்பது, பனீர் முதல் சிக்கன் பிரியாணி வரை 5-10 நிமிடத்திற்குள் சமைப்பது போன்ற பல ஆச்சர்யங்களைக் கொண்ட ஒரு அறிவியல் சமையல் முறைதான் ஒபோஸ்.
தண்ணீர் இல்லாமல் குக்கரில் சமைப்பது ஆபத்தில்லையா?
அதிக நீர், குறைவான வெப்பம், நீண்ட நேர சமையல் = ப்ரஷர் குக்கர் சமையல்.
குறைவான நீர் அல்லது சமைக்கும் பொருட்களில் இயற்கையாகவே இருக்கும் நீரை சமைக்கப் பயன்படுத்துவது, அதில் இருக்கும் நீரைக் கொண்டே சமைப்பதால் நிறம், குணம் மாறாத சத்தான உணவு கிடைப்பது = ப்ரஷர் பேக்கிங் எனும் ஒபோஸின் தனித்தன்மை.
இன்னும் என்ன பலன்?
ஒரு க்ரில் சிக்கனைக் கூட ஒபோஸ் ப்ரஷர் பேக்கிங் முறையில் குக்கரில் சமைக்க முடியும். ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படும் சுவையான உணவுகள் அனைத்தையும் குறைவான செலவில், சுவையாக, ஆரோக்கியமாக, வீட்டிலேயே சமைக்க ஒபோஸ் உதவும்.
ஏன் ஒபோஸ்?
ஏனென்றால் ஒபோஸ் என்பது அறிவியல் முறை சமையல்.
ஒரு மேஜிக் பாட்
சரியான அளவுகளில் பொருட்கள்.
குறைவான தண்ணீர்.
அதிக வெப்பம்
குறைந்த நேரத்தில் ப்ரஷர் பேக்கிங்கில் சமையல்.
சமைக்கவே தெரியாத ஒருவருக்குக் கூட சுவையான சமையல் 10 நிமிடத்தில் சமைக்க ஒபோஸ் முறை உதவுகிறது.
மாணவர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்குச் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள், வயதானவர்கள், சுவையாக சமைக்கத் தெரியாமல் அவதிப்படுபவர்கள், ஹோட்டல் சாப்பாடே ருசி என்றிருப்பவர்கள், அதிக செலவில் வெளியில் சாப்பிடுபவர்கள், வழக்கமான சமையல் முறைகளில் அதிக குழப்பமும், அதிக தோல்விகளையும் கண்டவர்கள் என்று பலருக்கு ஒபோஸ் சிம்பிளான ஒரு சமையல் முறையாக இருக்கும்.
வெற்றி அமைப்பு வனத்துக்குள் திருப்பூரின் இயற்கை வேளாண் பயிற்சி பள்ளியான அறப்பொருள் வேளாணகத்தில் ஒன் பாட் ஒன் ஷாட் (One pot One shot®) என்ற முறையில் எவ்வாறு சமையல் செய்யலாம் என்ற பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
நாள் : 08.02.2020
இடம் : அறப்பொருள் வேளாணகம் – கிளாசிக் பார்ம்ஸ் , மங்கலம் சாலை , லிட்டில் பிளவர் பள்ளிக்கு பின்புறம்
பயிற்சி கட்டணம் : ரூபாய் .600 ( ருபாய் ஆறுநூறு மட்டும்) மதிய உணவு உட்பட
60 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை
இழந்துவிட்ட இழந்துகொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுப்பதில் நமது ஆரோக்கியமும் உண்டு என்பதை மனதில் கொண்டு, இது போன்ற நிகழ்வுகளில் வாயிலாக பயன்பெற அன்புடன் வேண்டுகிறோம்
மாதம்தோறும் இது போன்ற உணவு சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் ,
- குமார் துரைசாமி
வெற்றி அமைப்பு