புளியோதரை சமையல் – செல்வி அம்மா சமையல்
புளியோதரை சமையல் தேவையான பொருள்கள்:
உதிரியாக வேக வைத்த அரிசி சாதம் 2 கப்
புளி ஒரு கையளவு
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி (5 மி.லி அளவு கொண்ட அளவு கரண்டி)
உளுந்தம் பருப்பு 1 தேக்கரண்டி (5 மி.லி அளவு கொண்ட அளவு கரண்டி)
கறிவேப்பில்லை சிறிது
கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
தோல் உரித்த வறுத்த வேர்க்கடலை 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் 6
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் 1/2 மேஜைக்கரண்டி
எள்ளு (தேவைப்பட்டால்) 1 மேஜைக்கரண்டி
வெல்லம் சிறிது
செய்முறை:
அடுப்பில் வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி விதை, மிளகு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
மறுபுறம், புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு, வெந்தயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டுத் தாளிக்கவும். அத்துடன் பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
பின்னர் புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனை புளிக் காய்ச்சல் என்பார்கள். இந்தப் புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு, வெல்லம், வறுத்து பொடித்த தூளை சேர்த்து கிளறி ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு இந்தப் புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும்.
அப்போது மேலும் சிறிது உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான புளி சாதம் ரெடி.
புளியில் கால்சியம், வைட்டமின் – பி பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது.
மேலும் சில எளிமையான வெரைட்டி ரைஸ் வகைகள்
செல்வி அம்மா சமையல் பிடித்திருந்தால் லைக்பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, உங்களோட கமெண்ட் கண்டிப்பாக பண்ணுங்க…