அசைவ ருசியில் சைவ சோயா பீன்ஸ் சில்லி சிக்கன் 65 | Soya 65 | Soya Chunks Recipe | Veg Starters
இன்று செல்வி சமையலில் அசைவ ருசியல் சைவ சில்லி சிக்கன் 65 எப்படி செய்வது என்று பார்ப்போம்.
உங்க வீட்டு குட்டிஸ்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது சில்லி சிக்கன், லெக் பீஸ் இது மாதிரி அசைவ உணவுனா எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது.
அப்படி பட்ட உணவு உங்க வீட்டிலேயே சுலபமாக செய்ய அதுவும் அசைவ உணவு சாப்பிட முடியாதவர்களுக்கு சைவத்தில் அசைவ சில்லி சிக்கன் 65.
மாலை நேரத்தில் அதாவது டீ டைம் இந்த ஸ்நாக்ஸ் செய்து வைத்தால் வைத்த மாயத்தில் தீர்ந்து விடும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
1 கப் சோயா, ஒரு முட்டை, சில்லி பவுடர், எண்ணெய், எலுமிச்சம் பழம், சோளமாவு வைத்து ஒரு புதுமையான் சைடிஸ் ஈஸியா ரெடி பன்னலாம் வாங்க.
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸ் சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து புழிந்து தண்ணீரை நன்றாக வடி கட்டி எடுத்துக்கொள்ளுங்கள். சில்லி சிக்கன் பவுடர், சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்க்க தேவையில்லை, முட்டை, எலுமிச்சம் பழம் நன்றாக கலந்து 5 நிமிடம் கழித்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து கல்ந்து வைத்த சோயா பீன்ஸ் மிதமான சூட்டில் எண்ணெயில் போட்டு எடுத்தால் சுட சுட சோயா பீன்ஸ் சில்லி ரெடி.
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் தேவையான அளவு ( சிறிய அல்லது பெரியது )
எலுமிச்சை பழம் – 1/2 பழம்
சில்லி பவுடர் – 3 டீஸ்பூன்
சோள மாவு – 1 ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு தேவையில்லை
முட்டை – 1.
உங்க வீட்டிலையும் செய்து பார்த்து செல்வி அம்மா சமையல் எப்படி இருந்தது என்று கமெண்ட் பன்னுங்க!!
Soya 65 Recipe Tamil | Meal Maker Chilli 65 Recipe In Tamil | Soya Chunk Recipe சோயா 65