நெல்லை இருட்டுக்கடை அல்வா
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு உணவுக்கு பிரபலமாகும்.
அல்வா என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரு ஊர் திருநெல்வேலி தான்.
ஏன் சினிமா பாடல் வரிகள் கூட வந்து விட்டது. அந்த அளவுக்கு உலக புகழ் பெற்றது.
திருநெல்வேலி இருட்டு கடை அல்வா!!
இங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வா சுட சுட சாப்பிட்டால் மெய் மறந்து அங்கேயே நின்று விடுவோம்..
ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பர் தான் இருட்டு கடை அல்வா நடத்தி வந்தவர்.
அதன் பின் அவர் சந்ததியினர் நடத்தி வருகின்றனர்.
இருட்டுக் கடை பெயர் காரணம்:
இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம், 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம்.
பொழுது சாயும் நேரத்தில் தான் இந்த கடை திறக்கப்படும்..
இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி, ‘இருட்டுக் கடை அல்வா’ என்ற பெயர் வந்து விட்டது. பெயர் வைப்பதில் தமிழர்களை மிஞ்சியவர்கள் எவர் இருக்கிறார்கள்.
இருட்டுக்கடை அல்வாவிற் கென்று தனி சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையை இன்றுவரை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற் கான தனிச் சுவையை தருவதாக சொல்லப்படுகிறது. கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள். மாலை 5.30க்கு கடையை திறந்தால் மனக்க மனக்க வாசனையுடன் அடுத்த 3 மணி நேரத்தில் அனைத்தும் காலியாகி கடையை மூடிவிடுவார்கள்.
அப்படி என்ன அந்த அல்வாவில் இருக்கு என்றால் சொன்னாலே நாவில் எச்சில் ஊரும் அளவுக்கு கையில் வடியும் வரை கம கமக்கும் நெய், சம்பா கோதுமை, சர்க்கரை, பால் அவ்வளவு தான்..
சுடச் சுட அல்வாவை ஒரு ஒரமாய் ருசித்த பின் , சைடில் கையை நீட்டினால் மிக்ஸர் தருவார்கள் அதை சாப்பிட்டபின் அங்கு இருந்து ஒரு பேப்பரில் கையை துடைத்துகே கொண்டே நகருவார்கள் அல்வா பிரியர்கள்.
சில நேரங்களில் கியூவில் நின்று வாங்குவதும் உண்டு.
அல்வா என்றால் சில கடைகளில் முந்திரி கல்ந்து இருக்கும், ஆனால் இருட்டு கடை அல்வா என்றால் எதுவும் சேர்க்காமல் அதன் ருசியை முழுமையாக உணரும் வகையில் வாயில் போட்டால் வலிக்கு கொண்டு அடி வயிரு வரை போகும்..
நாக்கில் சுவை அப்படியே நாட்டியம் ஆடும் அந்த நாள் முழுவதும்..
இதுவரை திருநெல்வேலி சென்றதில்லை என்றால் நிச்சயம் இந்த அல்வாவிற்க்காகவே ஒருமுறை சென்று ருசித்து, வாங்கி வரலாம்.