சுவையான கிராமத்து ஆட்டுக்கறி குழம்பு செய்வது எப்படி
சுவையான கிராமத்து ஆட்டுக்கறி குழம்பு செய்வது எப்படி
கிராமத்து முறையில் அதுவும் மண்பானையில் செய்த மட்டன் குழம்பு என்றால் தனி ருசிதான், நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் மட்டன் குழம்பு.
மண்பானை மட்டன் குழம்பு கிராமத்து முறையில் செய்வது எப்படி?
கறி மசாலா செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் 2 ஸ்பூன்
வர கொத்தமல்லி 2 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
வர மிளகாய் 6
சின்னவெங்காயம் 10
இஞ்சி 5 துண்டுகள்
பூண்டு 1
தேங்காய்ப்பூ – 2 டேபிள் ஸ்பூன்
முதலில் வானலில் எண்ணெய், கொத்தமல்லி, சீரகம், சோம்பு, மிளகு, வர மிளகாய், சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய்ப்பூ நன்றாக வதக்கவும். கமகம என்று கறி மசாலா வாசனை வரும். சின்ன வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
மட்டன் குழம்புக்கு தேவையான பொருட்கள்:
ஆட்டு கறி 3/4 – முக்கால்
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
பட்டை லவங்கம் ஏலக்காய் – தேவையானஅளவு
1 கப் – சின்னவெங்காயம்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
தக்காளி – 3
மஞ்சள் 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சுடுதண்ணி – 1 லிட்டர்.
மண்பானை மட்டன் குழம்பு கிராமத்து முறையில் செய்முறை
நல்லெண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்பு தக்காளி போட்டு வதக்கவும், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும், பின்பு அரைத்து வைத்த மசாலா சேர்க்கவும் ஆட்டு கறி 3/4 – முக்கால் சேர்த்து கல்லு உப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும்.
சுடுதண்ணி ஊட்றினால் கறி நன்றாக பஞ்சு போல வேகும். 1 மணி நேரம் வேகவைத்தால் சுவையான கிராம்த்து முறையில் மண்பானை ஆட்டுக்கறி குழப்பு சுட சுட ரெடி சாதத்துடன்பரிமாறினால் குழம்பும் காலி, சாதமும் காலி.
செல்வி அம்மா சமையல் பிடித்திருந்தால் லைக்பண்ணுங்க சேர்பண்ணுங்க உங்க கமெண்ட் மறக்காமா சொல்லுங்க…